Love Calculator - Calulate your love!

Thursday 28 April 2011

கிறுக்கல்கள்....


கிறுக்கல்கள்
 
2083849596_78417acc58.jpg
 
பனி துளி காதலன் திருடி விட்டான் புல் இதயத்தை..
 
20071022024218_blue-umbrella-in-the-rain-700.jpg
 
குடை இருந்தும் மழையில் நனைந்தோம் ...
எங்களுக்காக மழை அழுதது... பிரிவின் போது....
 
boys,rain,umbrella,cute,kid,children-4eb40daf4712f88af98f2772093a8c52_h.jpg
ஒற்றை குடை நனையாமல் நாங்கள் நனைந்தபடி எங்கள் மனம்..
 
the_girl_in_the_rain_by_best10photos1.jpg
 
மழையும் சுடுகிறது அவன் இல்லாமல் நான் மட்டும் நனைவதால்..

-- 

Wednesday 27 April 2011

என்ன செய்வது... ?????????????????


என்ன செய்வது... ?????????????????


என்ன செய்வது ?
நீ வெறுத்துப் பேசியபோது
சிரித்துப் பழகிவிட்டேனே
என்ன செய்வது ?

என்ன செய்வது ?
 
சிரிக்கின்ற இடத்தில்
நீ இருக்கிறாய்
ரசிக்கின்ற இடத்தில்
நானிருக்கிறேன்
என்ன செய்வது ?
                                            http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSIfzTGSfqzhGJ4vkrqogoPcryCHu2qpGx-uTwDFpAt7p7mZTWbLA
என்ன செய்வது ? 
என்ன செய்தும்
எழுத முடியாத
உன்னோடு இருந்த
மணித்துளியை
என்ன செய்வது ?

என்ன செய்வது ?
 
மரம் வீழ்ந்த பின்னாலும்
கிளை தேடும்
பறவையாய்
என்ன செய்வது ?

என்ன செய்வது ?
 
என்னோடு  இருந்த
தோழமை தொலைத்து
உன்னோடு இருந்த
என்னையும் தொலைத்து
காசைத் தொலைத்த
சிறுமியாய்
என்ன செய்வது ?
                                              http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS791JvJ_HkENZbnX5-7rAsvAtTddsEOLtn8i-BK5rDMr5kPUZVOA
ஆயிரம் முறை 
விலாசம் எழுதிப் போயிருக்கும்
உன் கண்களுக்கு
ஒருமுறை கூட
மடல் எழுத முடியாமல்
மௌனத்தில் கவிழ்ந்தன
இமைகள்...

எத்தனையோ முறை
 
பேசத் துடித்த உன்னிடம்
சலிப்பால் மட்டுமே
பேச மறுத்த
இதழ்களை
என்ன செய்வது?

எனக்காக ஏங்கித் தவித்த
 
உன் இதயத்தை
தெரிந்தும்
தட்டி விட்ட என்னை
என்ன செய்வது?

என்ன செய்வது
 
இப்போது ...?
கதவோரத்தில் நின்று கொண்டு
அழுது தொலைக்கிறேன்
                                             https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmq8yk2F3KsyF2d6ktLGeJagYOSSTN1NHU991wQ37LevQk6Dft334blawz4SJnJWPfq3VYbDN4p-8hYu3DJqt2rZAtCBdbuiz8zjAhFN8utXsoFdKcBOnkWr8EJBEPTRSoWbXfeLJF-gY/s320/c1ff6b9c984ab39f5b81197cf7ec2b0e.jpg
என்னை விட்டுத் 
தனியாய் செல்லும்
உன் ஊர்வலத்தில்
நானும்
என்ன செய்வது?

மீண்டும் ஒரு சிறுகதை...

மீண்டும் ஒரு சிறுகதை...



ஒரு திருமணம் ஆன பெண் கோல்ப் விளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்தபோது அங்கே இருக்கும் பந்து போடும் குழியினை நோக்கி தன் பந்தினை ஓங்கி அடித்தாள். பந்தானது குழிக்குள் விழாமல் குழியின் அருகே சென்று நின்றுவிட்டது.

மீண்டும் அந்த பந்தினை குழிக்குள் அடிக்க அந்த பெண் குழியின் அருகே போக, குழியின் உள்ளே ஒரு தவளை மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் இருந்தாம், இந்த பெண்னை கண்டவுடன் அந்த தவளை பெண்னே என்னை இந்த குழியில் இருந்து எடுத்துவிடு உனக்கு நான் 3 வரங்கள் தருகிறேன் என்றதாம்.

அந்த பெண்னும் தவளையை வெளியே எடுத்து விட்டு வரங்களை கொடுக்கும்படி கேட்டாலாம், தவளையானது சொன்னதாம், பெண்ணே உன்னிடம் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன், நான் நீ கேட்க்கும் வரத்தினை கொடுக்கிறேன், ஆனால் உனக்கு கொடுக்கும் வரத்தினை போல் உன் கணவனுக்கு 10 மடங்கு அதிகம் அந்த வரத்தின் பலன் கிடைக்கும் பரவாயில்லையா என்று கேட்டதாம்.

அதற்க்கு அந்த பரவாயில்லை என் கணவன் தானே அவருக்கு 10 மடங்கு அதிகம் கிடைப்பதால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என, தவளையும் சரி உன் வரங்களை கேள் என்றதாம்.

முதல் வரமாக அந்த பெண் உலகிலேயே மிக பெரிய பணக்காரி ஆக வேண்டும் என்றதாம்,  தவளை அவளை மீண்டும் எச்சரிக்கை செய்ததாம், பெண்ணே உன் கணவன் உன்னைவிட 10 மடங்கு பெரிய பணக்காரன் ஆகிவிடுவான் என்று, அந்த பெண்னும் அது ஒன்றும் பிரச்சனை இல்லை நீ வரத்தினை கொடு என்று சொல்ல வரத்தின்படி அந்த பெண்னும், அவள் கணவனும் பணக்காரர்களாக ஆகிவிட்டனர்.

இரண்டாவது வரம், உலகிலேயே மிக அழகிய பெண்ணாக வேண்டும், மீண்டும் தவளையின் எச்சரிக்கை, அந்த பெண்ணின் பரவாயில்லை என்ற மொழி, வரம் வழங்கப்பட்டு அந்த பெண்ணும், அவள் கணவனும் உலகில் மிக அழகானவர்களாக மாறினர்.

கடைசியாக மூன்றாவது வரம், தவளைக்கு மிகவும் ஆச்சிரியம், இந்த பெண் இப்படி தன் கணவனை நேசிக்கிறாளே என்று என்னியபடி அவளிடம், உன் மூன்றாவது வரம் என்ன சீக்கிரம் கேள் நானும் கொடுத்துவிட்டு கிளம்புகிறேன் என்றதாம்.

அந்த பெண் கேட்ட மூன்றாவது வரத்தினை கேட்டவுடன் அதிச்சியில் அந்த தவளை மயக்கம் அடையாத குறை ஆகிவிட்டதாம், அப்படி என்ன வரம் கேட்டாள் அந்த பெண்?














மூன்றாவது வரமாக அந்த பெண் கேட்டது,  தவளையே எனக்கு லேசான ஹார்ட் அட்டாக் வரவெய் என்று கேட்டாளாம். பெண்னிற்க்கு கிடைப்பது லேசான ஹார்ட் அட்டாக்,  கணவனுக்கோ 10 மடக்கு அதிகம் ஹார்ட் அட்டாக், பயபுள்ளை பொழைப்பான :-)

மருதாணி.. காதல் கவிதை..






நிறம் மாறா
வண்ணமும்;
நிலைக் குலைந்த என்
எண்ணமும்;
மணம் வீசும்
மருதாணியாக;
மலர்ந்த என் கரத்தில்!

அலங்கரித்துக் காண்பிக்க
வேண்டிய ஆடைகள்
இன்னும் மிச்சமிருந்து
அடம்பிடிக்க;
நீ இல்லாமல் போனதால்;
என் அலமாரியில்
இடம் பிடிக்க!
புதுப்பெண் என
எல்லோரும் என்
தாடையை இடிக்க;
சொட்டுச் சொட்டாய்
விழி நீர் என் கரம் நனைக்க;
வழிந்தும் அழியா
என் மருதாணி!

உங்கள் காதலை எப்படி வெளிபடுத்தலாம்????????!!!!!!!!!!!!!


உங்கள் காதலை எப்படி வெளிபடுத்தலாம்????????!!!!!!!!!!!!!


காதல் என்பது பூ மலர்வது போல. எந்த நொடியிலும் நிகழலாம். அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில்தான் வெற்றி கிடைக்கிறது. சொல்ல நினைத்தும் வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இயற்கை. ஆனால் சொல்லாத காதல் சோகக்காதல் ஆகிவிடும். காதலை சொல்லும் வழிமுறைகள் குறித்து சில யோசனைகள் :

மனமறிந்து சொல்லுங்கள்

நீங்கள் விரும்பும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். காதலை வெளிப்படுத்தும் தருணம் எத்தகையது என்பதையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் முதலாக கூறும் முன்பு ஒத்திகை அவசியம். இல்லை என்றால் முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும்.
ஆர்வமுடன் வெளிப்படுத்துங்கள்
எந்த தருணத்தில் காதலை வெளிப்படுத்துகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் மிகவும் முக்கியமானது. காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். நீங்கள் விரும்பும் நபர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலை இயல்பாக வெளிப்படுத்துங்கள் .
புகழுக்கு மயங்காதவர்கள் என்று யாரும் கிடையாது. மனம் திறந்து பாராட்டுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் புகழுரையை கேட்கவே நீங்கள் விரும்பும் நபர் உங்களிடம் பேசவருவார்கள்
நேசத்தை வெளிப்படுத்துங்கள்
காதலிப்பதை நேரடியாக தெரிவிப்பதை விட ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு செய்கையிலும் முதலில் புரிய வைக்கலாம். காதலிக்கும் நபருக்கு பிடித்த உடைகளை அணிவதுஅவருக்கு பிடித்த விசயங்களை செய்வது போன்றவை அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம்.
வார்த்தைகளை 'வளவளவென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக் கூடாது. உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.
பூக்களை நேசிப்பவர்கள்
ஆணோ, பெண்ணோ அனைவருமே பூக்களை நேசிப்பவர்கள்தான். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். 
ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. எதிராளிக்கு உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.
பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. 
காதல் சொல்லும்போது விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயானவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, 'அன்பே உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள். 
ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண்கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள்.
 மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை!


காதல்….

காதல்…. 

ஒரு மென்மையான உணர்வு. அதை உணர்வது பிரத்யேகமான ஒன்று. 







காதலிப்பதை காட்டிலும் காதலிக்கப்படுவது அனைவருக்கும் பிடித்தமானது. நம்மை நேசிக்க ஒருவர் இருக்கிறார், என்ற நினைவே உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி நம்மை சாதிக்க வைக்கும்.

காதலிக்கும் தருணங்கள் மிக இனிமையானவை.

 சின்ன சின்னதாய் அழகிய பரிசுப் பொருட்கள், மாலை நேர சந்திப்புகள், பட்டும் படாமலும் அருகாமையில் பயணிக்க நேரும் தருணங்கள், கண நேர சந்திப்புகளிலும் காவியம் பேசும் பார்வைகள், எதிர்பாராது நிகழும் ஸ்பரிசங்கள் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்க வைக்கும்.

காதல் மொட்டாக மலர்ந்து, திருமண பந்தத்தில் மணம் வீசும் மலராகி, வருடங்கள் ஆன பின்னும் என்றும் உதிராது நிரந்தரமாக இருக்க வேண்டும். அந்த காதல்தான் உண்மையானது. அத்தகைய காதலை வெற்றியாக்கி திருமண வாழ்க்கையிலும் சாதிக்க சில

யோசனைகள்:

மனதளவில் தயாராகவேண்டும்:



திருமணத்திற்கு மனதளவில் தயாரான பிறகே காதலை திருமணத்திற்குரிய கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். அதுவரை காதலிப்பதில் தவறில்லை. தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றவர்களின் நிர்பந்தத்திற்கு பயந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையின் பழக்க வழக்கங்கள், குணாதிசயங்கள், ரசனைகள் இவையெல்லாம் கடைசி வரை ஒத்துப்போகுமா? என்று பார்க்க வேண்டியது அவசியம்.

இயல்பாய் இருங்கள்:



காதலிக்கும் நபர்கள் இயல்பான குணத்துடன் பேசிப்பழகுங்கள். முதலில் இயல்பை மறைத்துவிட்டு திருமணத்திற்குப்பின்னர் இயல்பான குணம் வெளிப்படும் போதுதான் பிரச்சினை உருவாகிறது.
வாழ்க்கை பந்தத்தில் இவருடன் இணைந்தால் சரிவராது என்று மனதில் பட்டால், உடனே பக்குவமாக பேசி உறவை முறித்துக்கொள்வதில் தவறில்லை. நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்கள் துணையுடன் திருமணத்திற்கு முன்பே பேசிவிடுவது சிறந்தது. திருமணத்திற்கு பிந்தைய குழப்பங்கள் ஏற்படுவதை இது தவிர்க்க உதவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றியும், அவர்களின் குணாதிசயங்களைப்பற்றியும் காதலிக்கும் போதே பேசிவிடுவது மிகவும் முக்கியம்.

காதல் என்பது எதுவரை:


தன்னை விரும்பும் ஆண் உலகத்திலேயே தன் மீது மட்டும்தான் அதிக அளவில் காதல் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் அதிக பட்ச எதிர்பார்ப்பு. 
காதலில் பெண்கள், உள்ளத்திற்கே முதலிடம் தருகிறார்கள். ஆண்கள், அழகிற்கே முக்கியத்துவம் தருகின்றனர். காதலிக்கும் பொழுது இருந்த ஆத்மார்த்தமான நெருக்கம், கல்யாணமாகி இரு குழந்தைகள் பிறந்ததும், குறைந்து விடுகிறது. எனவே காதலை உடல் ரீதியாக அணுகுவதை விட உள்ளரீதியாக அணுகுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

யாராக இருந்தாலும் நூறு சதவிகிதம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாது. நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் எண்பது சதவிகிதம் ஒத்துப்போகும் நபர் நமக்கு துணையாய் அமைந்தால் மணம் முடித்து வாழ்க்கைப் பயணத்தை இனிதாக தொடங்குவதில் தவறில்லை.







தமிழ் கவிதைகள்....

தமிழ் கவிதைகள்....
                                                         
ன்று விடுமுறை நாள்..
ஏழு மணிக்கே திறக்கப்பட்டது...
நகரத்தின் இடையிலுள்ள பூங்கா...
யரமான பச்சை மரங்கள்...
கைகோர்த்து நிற்கும் வேலி...
நடுவில் புன்னகைக்கும் மலர்களை...
தாங்கி நிற்கும் மலர்ச்செடிகள்....
ங்குதான் வர சொன்னார்...
யாரையோ எதிர்பார்த்து வந்தவர்..
தன் காத்திருப்பை பதிவுசெய்தார்...
சீறிவந்த மோட்டார் சைக்களில்
இறங்கிய சில இளங்காளைகள்
ஓரிடத்தை ஆக்கிரமித்து அமர்ந்தார்கள்
போகும் நடை பயணத்தில்
சிறு களைப்பார நிழலின்
தஞ்சம் தேடி ஒருசிலர்
சில நாழிகைகளின் மரணத்தில்
எங்கிருந்தோ வந்த மனிதர்களைக்கொண்டு
நிரம்பி வழிந்தது பூங்கா
காதலர்கள், 
தம்பதிகள் ,குழந்தைகள்
நண்பர்கள், முதியோர்கள் என்று
அடையாளப்படுத்தியது அவர்களின் இருப்பை
சிலர் உறங்கிக் கொண்டிருந்தார்கள்
குழந்தைகள் ஓடி விளையாடியும்
பலர் பேசியும் சிரித்துக்கொண்டும்
ஒரு சிலரோ மௌனமாக
ந்தவர்கள் தின்று போடும்
மிச்ச உணவையும் காத்து
கிளைகளில் பறவைகளும்
சில பூனையும் நாய்களும்
த்தனை நிறங்களில் மனிதர்கள்
கண்ணீர் ,புன்னகை, மௌனம்
மனதிலிருந்து இறக்கி வைக்கிறார்கள்
அந்த தனிமை தருணத்தில்
காதல்,திருமணம்,எதிர்காலம்
என்ற முக்கிய விடையங்களுக்கு
ஆக்கபூர்வ தீர்மானங்கள் தீட்டுகிறார்கள்
அங்கு வந்தவர்களில் சிலர்
ந்திப்புக்களும் காத்திருப்பும்
பரிமாறும் பேச்சுக்களும்
தத்தம் அடையாளம் கண்டபின்
சிலர் எழுந்து சென்றனர்
திரவன் சாயும் மாலை
கூடு தேடும் பறவைகளைப்போல்
நான்கு திசைகளில் பிரிந்தனர்
பூங்காவில் கூடிய மனிதர்கள்
நேரமாச்சு நேரமாச்சு கிளம்புங்க
மீதம் இருந்தவர்களை விரட்டியபடி
பூங்காவின் காவல்காரன்
ரவு போர்வையாக மூட
அகம் முழுவதும் நிசப்பதம்
நாளை அவர்கள் வருவார்கள்
என்ற ஆழமான நம்பிக்கையில்
உறங்குகிறது பூங்கா.....

குட்டி குட்டி கதைகள்-


குட்டி குட்டி கதைகள்:

(1) மாப்பிள்ளையும், பொண்ணும்!


"பொண்ணு உன் தங்கச்சி மவனுக்குதானே?"
"ம்ம்... சும்மா கொடுத்துடுவேனா? என் அண்ணன் புள்ளைக்கு அவ பொண்ணை தந்தாவணும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறது தான் எங்க குடும்பத்து வழக்கம்"
“சொந்தத்துலே கொடுத்தா அதுகளுக்கு பொறக்குற புள்ளைகளுக்கு ஊனம் வரும்னு சொல்றாங்களே?”
“சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும். அதுக்கோசரம் உறவை வுட்டுத் தந்துட முடியுமா?”
பிறந்து ஒரு நாள் கூட ஆகாத ‘பொண்ணு’ தூங்கிக் கொண்டிருந்தாள். அப்பா, அம்மாவோடு ஹாஸ்பிடலுக்கு வந்திருந்த ‘மாப்பிள்ளை’ குச்சி மிட்டாய் சப்பிக் கொண்டிருந்தான்.

(2) யாரைடி கட்டிப்பே?

"தோ.. குமாரு வந்துட்டான். இன்னொரு வாட்டி சத்தமா சொல்லு!"
"கொமாருமாமாவைத்தான் பெரியவளானா கல்யாணம் கட்டிப்பேன்!"
கொமாருமாமா வெட்கத்தோடும், வெறுப்போடும் அடிக்கத் துரத்தினான். அத்தைகள் பாதுகாப்பில் ஒளிந்துகொண்டவளை பிடிக்கவியலாத இயலாமையில் அழுதுகொண்டே, "நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. அதுமாதிரி பேசவேணாம்ணு சொல்லு!"
அவனது அழுகை சிரிப்பையும், குதூகலத்தையும் சொந்தங்களுக்கு தந்தது. திரும்ப கேட்டார்கள். "ஏய் நீ பெரியவளானா யாரைடி கட்டிப்பே?"
“ம்.......” இம்முறை அவள் யோசித்துக் கொண்டேயிருக்க...
அரண்டுபோன அவன் மனசுக்குள் கத்தினான். “கொமாரு மாமாவைத் தான் கட்டிப்பேன்னு சொல்லுடி சனியனே!”

(3) கொருக்கலிக்கா, முந்திரிக்கா!

தென்னை ஓலைகளுக்கு இடையே பார்த்தபோது புத்தம் புதுசாய் தெரிந்தாள். ஓலை பின்னிக் கொண்டிருந்தான் முறைமாமன்.
முதன்முறையாய் அழகாய் தெரிந்தாள். கன்னங்கள் சிகப்பிட்டிருந்தது. போனவாரம் விளையாடும் போதுகூட, ’கொருக்கலிக்கா முந்திரிக்கா நிறைய நிறைய கொண்டுவா!’ ராகத்தில், ’கொமாரு மாமா கொமாரு மாமா என்னை கல்யாணம் கட்டிக்கோ!’ என்று பாடி, செமஅடி வாங்கினாள். பெண் உடனே பெரியவள் ஆகிவிடுகிறாள். ஆண் அப்படியேதான் இருக்கிறான். இப்போது அவள் கட்டிக்கச் சொல்லி கேட்கமாட்டாளா என்று ஏங்கினான்.
“மாமா” மெல்லிசாக கூப்பிட்டாள்.
‘என்ன?’
“என்னைக் கட்டிக்கிறியா மாமா?”
"போடி மூக்குச்சளி. உன்னை எவன் கட்டிப்பான்?"

(4) செருப்பால அடிப்பேன்!


"ம்ம்ம்.. எவ்ளோ நேரம் சும்மா இருப்ப? ஏதாவது பேசேன்?"
"என்ன பேசுறது?" சொல்லியாக வேண்டும் என்று தோன்றினாலும், எப்படி சொல்லுவது என்கிற தயக்கத்தில் இருந்தான்.
"சும்மா ஏதாவது பேசேன்" அவளே தூண்டினாள்.
"உங்கிட்டே திடீர்னு 'ஐ லவ் யூ' சொன்னா என்ன பண்ணுவே?" நூல்விட்டான்.
"செருப்பால அடிப்பேன்" மிரண்டுப்போய் எழுந்து விட்டான்.
"சொன்னது என் அத்தைப்பையனாயிருந்தா செருப்படிக்குப் பதிலா கிஸ் அடிப்பேன்" சத்தமின்றி, முணுமுணுப்பாய் தலைகுனிந்து சொன்னாள்.
அத்தைப்பையனான அவனுக்கு கடற்காற்றின் சத்தத்தில் அவள் சொன்னது கேட்கவேயில்லை.

(5) பஜாரியான தேவதை!

"நீ பார்க்க எப்படி இருப்பே?"
"ஜோதிகா மாதிரி இருப்பேன்"
"நானும் சூர்யா மாதிரி இருப்பேன்"
"அப்படியா? ரொம்ப பொய் பேசுவியா?"
"ஆமாம். சூர்யா மாதிரி இருப்பேன்னு சொன்னது பொய்"
"அதானே பார்த்தேன்?"
"சூர்யாவை விட சூப்பரா இருப்பேன்"
"அட்றா.... அட்றா.... நேருல பார்க்கலேன்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு அள்ளி விடறியா?"
"நேர்ல வேணா பாப்போமே?"
"பார்க்கலாம் சார். நேரா உங்க வீட்டுக்கு வாங்க"
“அய்யய்யோ பொண்டாட்டி. நீயாடி? இது என்ன புது நம்பர்?”
“என் பிரெண்டோட நம்பர். முதல்லே வீட்டுக்கு வாடா. வெச்சுக்கறேன்”
தேவதைகள் வானத்திலிருந்து குதிப்பதில்லை. மாமன்களுக்கு மகள்களாக பிறக்கிறார்கள். என்ன? கல்யாணம் கட்டிக் கொண்டதற்குப் பிறகுதான் பஜாரிகளாக மாறிவிடுகிறார்கள்.

Search This Blog